Thursday, 20 December 2012

Working of Airbag in CAR



காரில் இருக்கும் உயிர்காக்கும் கருவிகள் Seat Belt மற்றும் Airbag.
இதில் Airbag எப்படி செயல் படுகிறது என்று பார்க்கப் போகிறோம்.
Airbag மெல்லிய நைலான் துணியினால் செய்யப்பட்ட எளிதில் பிய்ந்துபோகாத ஒரு தலையணைப் போன்ற வடிவம் உடையது. இதை மடித்து Steering ன் உட்புறம் வைப்பார்கள். இதில் ஒரே ஒரு துவாரம் மட்டுமே இருக்கும். கார் மோதலின் போது, அந்த துவாரத்தின் வழியாக காற்று உள்ளே அனுப்பப்படும்.

#1 சரி காற்று எங்கே இருந்து வருகிறது என்று பார்ப்போம்.
இதற்கு சோடியம் அசைடு (Sodium Azide) என்ற கெமிக்கல் பவுடர் பயன்படுகிறது. இதை Steering ன் உள்ளே வைத்திருப்பார்கள், இதற்குத் தேவையான வெப்பம் (Heat) பட்ட உடன், நைட்ரஜன் வாயு உண்டாகிறது.

2NaN3 -------> 2Na + 3N2

இந்த தேவையான அளவு நைட்ரஜன் வாயு வேறு எங்கும் செல்ல முடியாததால், அருகில் இருக்கும் Airbag ன் சிறு துவாரம் வழியாக வேகமாக உள்ளே செல்கிறது, இதனால் Airbag, Steering லிருந்து வெளியே வந்து கார் ஓட்டுனரின் உயிரைக் காப்பாற்றுகிறது

#2 இப்போது தேவையான அளவு வெப்பம் எப்படி வருகிறது என்று பார்ப்போம்,
காரின் முன்பகுதியிலிருந்து, Steering வரை ஒரு மின் கம்பி(wire) இணைப்பு இருக்கும். முன்பகுதியில் crash sensor பொருத்தப்பட்டிருக்கும், Steering அருகில் வெடி பொருள் மற்றும் சோடியம் அசைடு இருக்கும். கார் 6 to 15 km/h வேகத்தில் (இது காருக்கு கார் மாறுபடும்) சென்று மோதினால் கூட crash sensor அதை உணர்ந்து மின் அதிர்வுகளை Steering வரை அனுப்பி அங்கு இருக்கும் வெடி பொருள் மீது பட்டு வெப்பத்தை உருவாக்கி விடும், இந்த வெப்பம் சோடியம் அசைடு கெமிக்கல் பவுடரின் மீது வேதி வினையை ஏற்படுத்தி, சோடியமாகவும், நைட்ரஜன் வாயு வாகவும் பிரிகிறது. For example, 130 கிராம் சோடியம் அசைடு பவுடர் சுமார் 67 லிட்டர் நைட்ரஜன் வாயுவை உருவாக்கும்.

குறிப்பு: கார் மோதியதிலிருந்து, Airbag விரிவடையும் வரை ஆகும் மொத்த நேரம் 25 முதல் 30 மில்லி செகண்ட் மட்டுமே.
*என்னதான் Airbag இருந்தாலும், Seat Belt கண்டிப்பாக போட வேண்டும். Seat Belt போடாமல் Airbag மட்டும் இருந்து எந்தவித பிரயோஜனமும் இல்லை.

இதே முறையில் camera வையும், mobile லையும் கீழே விழுந்தாலும் பாதுகாப்பாக வைக்கமுடியும்.

No comments: