Monday, 24 December 2012

If Sound Travel Through Vacuum...

Tamil Version:
வருஷா வருஷம் தீபாவளியன்று, இந்த வார்த்தையைக் கேட்டிருப்பீர்கள். “வெடிச்சத்தம் தாங்க முடியல, காதே செவிடாயிரும் போலிருக்கு”.
இந்த வெடிச்சத்தத்திற்கே இப்படி என்றால், வானில் விண்கற்கள் மோதிக்கொள்ளுவதினாலும், சில நட்சத்திரங்கள் தாமாகவே வெடித்துச் சிதறுவதினாலும் ஏற்படும் சத்தம், வெடிச்சத்தத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக இருக்கும். இந்த சத்தங்கள் பூமியை வந்தடைந்தால், பூமி சுக்கு நூறாக உடைந்து விடும் என்பது நிச்சயம்.
(ரஜினி யின் எந்திரன் படத்தில் பார்த்திருப்பீர்களே, ரோபோ ரஜினி பாட்டின் சத்தத்தை அதிகமாக்கியவுடன், அங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் உடைந்து விடும்.)

ஆனால் இதைப்போல் அசம்பாவிதங்கள் பூமிக்கு ஏன் நிகழவில்லை, என்று தெரியுமா?

பூமியைச் சுற்றி சுமார் 1000 கி.மீ வரை தான் காற்று (வளிமண்டலம்) இருக்கிறது. அதற்கு பிறகு வெற்றிடம் தான். ஒலி அலைகளின் பண்புகளின் படி, சத்தம் (ஒலி) வெற்றிடத்தின் வழியாக ஊடுருவிச் செல்லாது. ஏனெனில் அதிர்வுகளினால் வருவது தான் சத்தம். வெற்றிடத்தில் அதிர்வுகளை உண்டாக்குவதற்கு ஊடகம் (திடப்பொருள், திரவம், காற்று மூலக்கூறுகள் போன்றவை) இல்லை. சத்தம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்ல கண்டிப்பாக ஊடகம் தேவை.

இப்போது யோசித்துப் பாருங்கள், சத்தத்தை வெற்றிடத்தின் வழியாகப் போகமுடியாத படிச் செய்து, பூமியைச் சுற்றி வெற்றிடத்தை உருவாக்கி, பூமியைக் காப்பாற்றியது யார்?. - இயற்கை என்று சொல்லலாம். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், இதற்கு விடை கடவுள் என்றும் சொல்லலாம். (இன்னும் உங்களுக்குப் புரிய வேண்டும் என்றால் 360 என்ற சிறுகதையை இந்த blog spot ல் படியுங்கள். இயற்கையும், கடவுளும் ஒன்றுதான் என்பது புரியும்.)

இப்படி இருக்கும் போது இன்னொரு கேள்வி உங்களுக்குத் தோன்றுகிறதா?. அதாவது, பூமியைத் தவிர்த்து மற்ற கிரகங்களில் யாரேனும் இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள பல மொழிகளில் பேசப்பட்ட சத்தத்தை விண்ணிற்கு அனுப்பி இருக்கிறார்கள். அதே சமயம், பலவித புரிந்து கொள்ள முடியாத சத்தங்களையும் நமது அறிவியலார் விண்ணிலிருந்து பெற்றிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? இதற்கு பதிலை எனது அடுத்த post ல் தெரிவிக்கிறேன்.

English Version:
On every year diwali, you can see people saying, "I can't bare the noise of crackers, it may spoil my ears". But you know,  In the sky so many asteroids are collide with each other’s often. Stars are burst and create plants like solar system. These sounds are so heavy when compared to the crackers sound. If it reaches to the earth, earth will be demolished in to small pieces.
(In Rajini's Enthiran film, you can see when the ROBO raises the song sound; the glasses in that room are broken.)


You got any idea, why these type of demolition not happening for earth?

Atmosphere around the earth is some 1000 km only, after that just vacuum. As per the Sound waves property, it cannot pass through vacuum. Because vibration making sound. In vacuum area there is no medium (rigid body, water, air molecules) for making vibration. Some medium is needed for transferring sound from one place to another place.

Now think about this, who is creating Sound waves property like this and creating vacuum around earth?- May be Nature, If you believe in GOD, it may be GOD. (If you need more understanding about Nature/GOD, Just go through 360 a short story (in Tamil) in this blog spot. You can understand both are same.)

So now you must think about one more question, Scientists are doing research about aliens by sending sound to the galaxy with all the languages. And they received some unknown sound from galaxy. Is it possible in vacuum place? Well, this may be my next post.

No comments: