Wednesday, 28 November 2012

வனவாசம்

மகாபாரதத்திலிருந்து சில தகவல்களை இங்கு பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

பாண்டவர்களின் 12 வருட வனவாசம் மற்றும் 1 வருட அஞ்ஞாதவாசம் (அதாவது யாரும் கண்டுபிடிக்காதவாறு வேறு வேடத்தில் 1 வருடம் கழிக்க
வேண்டும்) முடியும் முன்னரே துரியோதனன் விராட நாட்டு யுத்தத்தில் அர்ஜூனனை கண்டுவிட்டதாகவும், ஆகையால் அவர்கள் மீண்டும் வனவாசம் செல்ல வேண்டும் என்று கூரினான்.

ஆனால் தர்ம சாஸ்திரப்படி 13 ஆண்டுகள் முடிந்த பிறகே அர்ஜூனன் தன்னை வெளிப்படுத்தினான் என்று சாஸ்திர வல்லுநர்களும் மற்றும் பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார் முதலானோர் சொன்னார்கள்.

இந்த முரண்பாட்டிற்கான காரணம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

நாம், நாள்களை இரண்டு விதமாக கணக்கிடுகிறோம், ஒன்று பூமி சூரியனை சுற்றும் கால அளவு, மற்றொன்று சந்திரன் பூமியை சுற்றும் கால அளவு.

இதில் சாஸ்திரங்கள் சந்திரனை ஆதாரமாக கொண்டு கணக்கிடப்படுகிறது. திதி, அமாவாசை, சதுர்த்தி, ஏகாதேசி முதலான கணக்கீடு சந்திரனின் வளர்பிறை தேய்பிறை வைத்துக் கணக்கிடப்படுகிறது. பவுர்ணமி முதல் அடுத்த பவுர்ணமி வரை ஆகும் காலம் 1 மாதம்.

சூரியனின் கால அளவின் படி
பூமி ஒரு முழு சுற்றிற்கு ஆகும் காலம் = 365.2422 நாட்கள்.

சந்திரனின் கால அளவின் படி
பவுர்ணமி முதல் அடுத்த பவுர்ணமிக்கு ஆகும் காலம் = 29.531 நாட்கள் (1 மாதம்)
12 மாதங்களுக்கு = 29.531*12 = 354.372 நாட்கள்.

ஒரு வருடத்திற்கு சூரியன் மற்றும் சந்திரனின் கால வேறுபாடு = 365.2422 - 354.372 = 10.8702 அதாவது 11 நாட்கள் எனலாம்.

மூன்று வருடத்திற்கு 3*11 = 33 நாட்கள். (1 மாதம் கால வேறுபாடு வருகிறது.) இதை அதிக மாதம் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அப்படிப் பார்க்கும் போது 13 ஆண்டுக்கு, 4 மாதங்கள் வித்தியாசப்படுகிறது.

அதாவது சாஸ்திரப்படி பாண்டவர்கள் 13 ஆண்டுகளை முடித்துவிட்டார்கள், ஆனால் துரியோதனனின் கூற்றுப்படி இன்னும் 4 மாதங்கள் மீதம் இருக்கும்
போதே அர்ஜூனனைப் பார்த்து விட்டான்.

சந்திரனின் கால அளவையே சாஸ்திரம் ஒத்துக்கொள்வதால், பாண்டவர்கள் செய்தது சரி.

No comments: