Sunday, 18 November 2012

மழை நீர்

மழை நீர் ஒரே கம்பியாக விழாமல் துளித்துளியாக வானத்திலிருந்து விழுவது ஏன்?

                   மழை என்பது ஒரு கூட்டு முயற்சி. சூரியன், பூமி, காற்று மண்டலம் மூன்றும் தேவை. சூரியன் பூமியைச் சூடாக்க, ஈரப் பிரதேசங்களின் நீர் ஆவியாகிவிடுகிறது. மேலே நோக்கிச் செல்லும் வெப்பக் காற்று, ஆவியையும் இழுத்துச் செல்ல.... மேலே செல்லச் செல்ல குளிரடைகிறது. ஆவியில் உள்ள நீர் விடுபட்டு மேகமாகிறது. மேகங்களுக்குள் சின்னச் சின்ன நீர்த்துளிகள் சேர்ந்து சேர்ந்து பெரிய நீர்த்துளியாகி, அதன் கணம் அதிகமாகி மேல் நோக்கிய காற்றோட்டத்தையும் மீறி கீழே விழும்படி குண்டாகிவிட விளைவது ஒரு மழைத்துளி !. அடுத்த மழைத்துளி அதற்கு அடுத்துப் பிறந்து உருவானது தனியானது.

1 comment:

Anonymous said...

Superb information for school students.